சவூதி அரேபியா மருத்துவமனை தீ விபத்து; 20  இற்கும் மேற்பட்டோர் பலி

சவூதி அரேபியா மருத்துவமனை தீ விபத்து; 20 இற்கும் மேற்பட்டோர் பலி

சவூதி அரேபியா மருத்துவமனை தீ விபத்து; 20 இற்கும் மேற்பட்டோர் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 3:11 pm

சவூதி அரேபியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குனர் கூறினார்.

தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், விபத்திற்கான காரணம் தெரியவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்