இன்று மீலாதுன் நபி விழா

இன்று மீலாதுன் நபி விழா

இன்று மீலாதுன் நபி விழா

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 8:38 am

இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்பத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.

அகிலத்தின் அருட்கொடை இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை அதாவது கி.பி 571 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பிறந்தார்கள்.

தனது பிறப்புக்கு முன்பே தந்தையை இழந்த நபியவர்கள் ஆறாவது வயதிலேயே தாயாரையும் இழந்தார்கள்.

ஜாஹிலிய்யாக் காலம் என்ற மூடக் கொள்கைகள் நிறைந்த அந்த காலத்தில், முஹம்மத் நபியவர்கள் உண்மைக்கும் நம்பிக்கைக்கும் அல் அமீன் அஸ்ஸாதிக் என்ற சிறப்பு நாமங்களாலும் அழைக்கப்பட்டார்கள்.

40 வயதில் நபித்துவத்தைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள் 10 வருடகாலம் மக்காவில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

மக்களுக்கு வாழ்க்கையின் உண்மைத் தன்மையை புரிய வைத்து மனிதனைப் பூரண மனிதனாக்கும் பணியில் ஈடுபட்ட நபியவர்கள் பல சொல்லொணா இன்னல்களையும் சந்தித்துள்ளார்.

மக்களைநேர்வழிப்படுத்துவதற்கு அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்கள் எண்ணிலடங்காதவை.

பொறுமை, விட்டுக் கொடுப்பு , அன்பு, மரியாதை, மற்றவர்களை மதித்தல் என்பன அவரது வாழ்வில் நிறைந்து காணப்பட்டன.

இறைத்தூதர் இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்டு முழுமையாக வாழ்ந்து காட்டி வாழக் கூடிய சமூகத்தை உருவாக்கி விட்டு தனது 63 ஆம் வயதில் இறையடிசேர்ந்தார்கள்.

உலகிற்கு மிகச் சிறந்த நடவடிக்கையை மேற்கோள்வது, நபி நாயகத்திற்கு வழங்கி கௌரவம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாதுன் நபி விழா முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக நிலவும் சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் நாட்டிலுள்ள அனைத்து முஸ்ஸிம்களுக்கும் தனது வாழ்த்தை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அனைத்து அடிப்படை வாதிகளையும் தோல்வியடைச் செய்து சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் முஹம்பத் நபியின் போதனைகள் உயிர்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீலாத் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்