வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500 இலும் அதிகம்

வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500 இலும் அதிகம்

வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500 இலும் அதிகம்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2015 | 10:18 am

இந்த வருடம் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2666 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .

மோட்டார் சைக்கிள் விபத்தில் 968 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதில் அனேகமானோர் கவனயீனமாக வாகனம் செலுத்தியமையால் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேகமாக வாகனங்களை செலுத்தும் போது கட்டுப்படுத்த முடியாமையினால் ஏற்படும் வீதி விபத்துகளே அதிகம் இடம் பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்