2016 ஆம் ஆண்டு பூமியின் மிகவும் வெப்பமான  ஆண்டாக காணப்படும்: ஆய்வில் தகவல்

2016 ஆம் ஆண்டு பூமியின் மிகவும் வெப்பமான ஆண்டாக காணப்படும்: ஆய்வில் தகவல்

2016 ஆம் ஆண்டு பூமியின் மிகவும் வெப்பமான ஆண்டாக காணப்படும்: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 10:39 am

உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வரும் 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2016 ஆம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக அமையும் என்று இங்கிலாந்து வானிலை அமைப்பு தகவல் வெளிளிட்டுள்ளது.

அண்மையில் உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு 2015 ஆம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் படி 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேசமயம் அடுத்த ஆண்டு (2016) நடப்பு ஆண்டை காட்டிலும் அதிக வெப்பம் நிறைந்ததாக இருக்கும். 2016 ஆம் ஆண்டின் வெப்பநிலையானது தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தையகாலத்தை ஒப்பிடும் போது 1.02 செல்சியஸ் முதல் 1.26 செல்சியஸ் வரை அதிகரிக்க 95 சதவீதம் வாய்ப்புள்ளது.

அதேசமயம் 2015 ஆம் ஆண்டின் வெப்பநிலையானது வழக்கத்தை விட 1 செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் இங்கிலாந்து வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி பாக்கும் போது 2014 ஆம் ஆண்டு முதல் உலகின் வெப்ப நிலை தொடர்ச்சியாக அதிகரித்தப்படி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்