விடுமுறை காலங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவும் – பொலிஸ் தலைமையகம்

விடுமுறை காலங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவும் – பொலிஸ் தலைமையகம்

விடுமுறை காலங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவும் – பொலிஸ் தலைமையகம்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 11:23 am

விடுமுறை காலங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் சந்தரப்பத்தில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது மீட்பு பணியாளர்கள் இருக்கும் இடத்தில் நீராடச் செல்வது பாதுகாப்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில் நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அதிகமாக பதிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வாகன விபத்துக்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதும் அவசியம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

சிறு வயதினர் வாகனங்களை செலுத்துவதற்கு இடமளிக்காதிருப்பது பெரியோர்களின் பொறுப்பாகும் எனவும் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்