”வாழ்வை நேசிப்போம்” எயிட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம்: காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி

”வாழ்வை நேசிப்போம்” எயிட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம்: காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி

”வாழ்வை நேசிப்போம்” எயிட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம்: காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 10:30 pm

எச்.ஐ.வி. எயிட்ஸ் விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு கட்டமான இசை நிகழ்ச்சி இன்று கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெற்றது.

”வாழ்வை நேசிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய விழிப்புணர்வுத் திட்டத்தில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்துகொண்டிருந்தார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் ஷெவ்ரோன் லங்கா லுப்ரிகன்ட்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

எம்.ரி.வி. எம்.பி.சி ஊடக வலையமைப்பின் சக்தி FM மற்றும் சக்தி TV ஆகியன இன்றைய இசை நிகழ்ச்சியை நடத்தின.

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் உள்ளிட்ட தமிழக இசைக் கலைஞர்கள் பலர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

எச்.ஐ.வி. எயிட்ஸ் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை (20) கொழும்பில் நடை பவனியும் சைக்கிள் ஓட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்