வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 12:30 pm

தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (19) காலை 9.30 இற்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதுடன், வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று இடம்பெற்று வருவதாகவும் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சிபீடமேறிய அரசினால் தேசிய நிறைவேற்று அதிகார சபையொன்று உருவாக்கப்பட்டதா என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன எழுப்பிய கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறானதோர் சபை உருவாக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதன்போது சபையில் கோஷங்கள் எழுப்பட்டுள்ளன.

நல்லாட்சியின் கீழ் அமைக்கப்பட்ட சில குழுக்களுக்கு, சிலரால் நிறைவேற்று சபையென பெயர் வழங்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வமாக அவ்வாறானதோர் தேசிய நிறைவேற்று குழுவொன்று அமைக்கப்படவில்லை என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தேசிய நிறைவேற்று அதிகார சபையின் தீர்மானத்திற்கு அமைவாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிரதமரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

எனினும் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்