வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 7:21 pm

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கின் பொருளாதாரம் தொடர்பிலும் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் இராணுவத்திடம் இருக்கின்ற நிலங்களில் ஒரு பகுதியை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்துரையாடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்