மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது – மஹிந்த

மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது – மஹிந்த

மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது – மஹிந்த

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 9:43 pm

லங்கா சமசமாஜக் கட்சியின் 80 ஆவது சம்மேளனம் நேற்று (18) மஹரகமவில் நடைபெற்றது.

மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது;

[quote]குறுகிய காலத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு என்ன நேர்ந்தது எனும் விடயத்தை நான் புதிதாகக் கூற வேண்டியதில்லை. எத்தனை தடவைகள் திருத்தப்பட்டன? திருத்துவது சிறந்தது. ஆனால் ஒரு பகுதியை மாத்திரம் திருத்துவது ஏற்புடையதல்ல. இதனால் என்ன நடக்கும்? இன்னும் சில மாதங்களில் பணம் அச்சிடப்படும். மறுபக்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரப்படும். நிபந்தனைகளுக்கு அடிப்பணிய வேண்டும். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்