பெற்றோலுடன் பாராளுமன்றம் சென்ற வடிவேல் சுரேஷ்: தீக்குளிக்க முயற்சி

பெற்றோலுடன் பாராளுமன்றம் சென்ற வடிவேல் சுரேஷ்: தீக்குளிக்க முயற்சி

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 4:47 pm

தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாகத் தெரிவித்து பெற்றோலுடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிக்க முற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பொலிஸாரின் தலையீட்டுடன் சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இன்று தீக்குளிக்கப் போவதாக நேற்று (18) சபையில் அறிவித்திருந்தார்.

தமது கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என கூறி பாராளுமன்றத்திற்குள் பெற்றோலை எடுத்துச்செல்ல இன்று அவர் முயற்சித்துள்ளார்.

பொலிஸாரின் தலையீட்டுடன் பாராளுமன்ற உறுப்பினர் பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

பெற்றோலுடன் பாராளுமன்றம் சென்ற வடிவேல் சுரேஷ்: தீக்குளிக்க முய…பெற்றோலுடன் பாராளுமன்றம் சென்ற வடிவேல் சுரேஷ்: தீக்குளிக்க முயற்சி http://wp.me/p5pPCj-hE2

Posted by Bella Newsfirst on Saturday, December 19, 2015


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்