புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 70 குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 70 குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 70 குடும்பங்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 11:12 am

புத்தளம் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று (18) பெய்த கடும் மழையால் மதுரங்குளி ஶ்ரீமாவோபுர கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீடுகளில் வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரங்குளி -ஜின்னாவத்தை பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான சமைத்த உணவை வழங்குவதற்கு கிராம சேவையாளர் அலுவலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் தலா 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சுமார் 2 அடி வரை வௌ்ளம் பாய்வதால் எலுவான்குளம் – மன்னார் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்