குத்துச்சண்டை கோதா: நடப்புச் சாம்பியன் நாவோ இகெயாமா பட்டத்தை தக்கவைத்தார்

குத்துச்சண்டை கோதா: நடப்புச் சாம்பியன் நாவோ இகெயாமா பட்டத்தை தக்கவைத்தார்

குத்துச்சண்டை கோதா: நடப்புச் சாம்பியன் நாவோ இகெயாமா பட்டத்தை தக்கவைத்தார்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 10:12 pm

இலங்கையின் முதலாவது தொழில்சார் குத்துச்சண்டை கோதா இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத் தொகுதியில் இன்று இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற முதலாவது தொழில்சார் குத்துச்சண்டை கோதாவைப் பார்வையிட விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பெருந்தொகையானோர் இரத்மலானை ஸ்டெய்ன் கலையக தொகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வின் அனுசரணையாளர்களான ஜப்பானின் Future Promotions அமைப்பின் சார்பாக யசூஷி ஹிரயாமா, Global Sports Academy சார்பாக டயிசூகே காடோ ஆகியோர் இணைந்துகொண்டனர்.

உலக குத்துச்சண்டை சம்மேளனத்தின் கண்காணிப்பில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தைப் பிரதிநிதித்துவம் செய்து உலக தரவரிசையின் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கோதா 46 கிலோகிராம் Atom Weight பிரிவில் நடைபெற்றது.

குறித்த எடைப் பிரிவில் தற்போதைய சாம்பியனான ஜப்பானின் நாவோ இகெயாமா (Nao Ikeyama), பிலிப்பைன்ஸின் ஜூஜியான் நகம்ஓவாவுடன் ( Jujeath Nagaowa ) மோதினார்.

இறுதியில், நடப்புச் சாம்பியனான நாவோ இகெயாமாவே பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்