ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களை முடக்க ஐ.நா. தீர்மானம்

ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களை முடக்க ஐ.நா. தீர்மானம்

ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களை முடக்க ஐ.நா. தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 5:31 pm

ஐ.எஸ், அல்கய்தா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குக் கிடைத்து வரும் அனைத்து வகையான நிதி ஆதாரங்களையும் முடக்கும் வகையிலான தீர்மானமொன்று ஐ.நா. பாதுகாப்புக் சபை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சர் ஜாக் லியூ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இது போன்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டமை இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் பயங்கரவாதக் குழுக்களுக்குக் கிடைத்து வரும் நிதி ஆதாரத்தை முடக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க நிதி அமைச்சர் ஜாக் லியூ கூறியதாவது:

[quote]பிற பயங்கரவாதக் குழுக்களுடன் ஒப்பிடுகையில், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு (ஐ.எஸ்) வெளியிலிருந்து கிடைக்கும் நிதி உதவி மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. புதிய பகுதிகளை ஆக்கிரமித்தல், கொள்ளையடித்தல் மூலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிதி திரட்டி வந்த நிலை மாறிவிட்டது. அதற்குப் பதிலாக, கச்சா எண்ணெயைக் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதுவரையில், 50 கோடி டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்பதன் மூலமாகவே அவர்களின் நிதி ஆதாரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும். இது சாத்தியமாவதற்கு இங்கு தீர்மானத்தில் வாக்களித்த நாடுகளும், பிற கூட்டணி நாடுகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்