எலும்பும் தோலுமான மாடல் அழகிகளுக்கு பிரான்ஸில் வலுக்கிறது தடை

எலும்பும் தோலுமான மாடல் அழகிகளுக்கு பிரான்ஸில் வலுக்கிறது தடை

எலும்பும் தோலுமான மாடல் அழகிகளுக்கு பிரான்ஸில் வலுக்கிறது தடை

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 4:31 pm

பிரான்ஸ் நாட்டில் மிகவும் ஒல்லியான (மெலிதான) மாடல் அழகிகள் பேஷன் ஷோக்களில் பங்கேற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தடையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாடல்கள் ஷோக்களில் பங்கேற்கும் முன்னர், அவர்களது வயது, உடல் உயரத்திற்கேற்ப எடை இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேஷன் ஷோக்களில் பங்கேற்பதற்காக பெண்கள் சாப்பிடாமல், பட்டினியிருந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாலும், அவர்களைப் பார்க்கும் இளம் பெண்கள் தாங்களும் அதுபோல ஆக ஆசைப்பட்டு நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாவதாலும், பிரான்ஸ் நாடு மிக மெலிதான மாடல்களுக்கு தடை விதித்தது.

இதையும் மீறி பேஷன் ஷோக்களில் எலும்பும் தோலுமாக மாடல் அழகிகள் தோன்றினால், அவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், 55 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டம் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இஸ்ரேல், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் நாடுகளில் இந்த தடைச் சட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்