உலகின் மிகச்சிறிய பென்குயின்களுக்கு காவலர்களாக நாய்கள்

உலகின் மிகச்சிறிய பென்குயின்களுக்கு காவலர்களாக நாய்கள்

உலகின் மிகச்சிறிய பென்குயின்களுக்கு காவலர்களாக நாய்கள்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 6:12 pm

அவுஸ்திரேலியாவின் மிடில் தீவில் தான் உலகிலேயே மிகச்சிறிய பென்குயின்கள் வசிக்கின்றன.

1 அடி உயரமும் 1 கிலோ எடையும் கொண்ட இவை ஒரே இடத்தில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை.

மிடில் தீவிலுள்ள அரிதான இந்தப் பென்குயின்களை நரிகள் வேட்டையாடுவதால் அதன் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் 800 ஆக இருந்த அவை, 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 4 பென்குயின்களாக அருகிவிட்டன.

இவற்றைக் காப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு இவற்றைக் காப்பதற்கு நாய்கள் தான் சரியான தீர்வு என அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

அவுஸ்திரேலியாவில் வீடுகளிலுள்ள கோழிகள், ஆடுகளைக் காக்க நாய்களை மக்கள் பயன்படுத்தும் வழக்கம் உண்டு.

இதையே ஆதாரமாகக் கொண்டு, பென்குயின்களை நாய்கள் மூலம் காக்கும் தீர்மானம் எட்டப்பட்டது.

நரிகள் வரும் இடங்களில் எல்லாம் நாய்கள் நிறுத்தப்பட்டன. நாய்களின் குரைப்புக்குப் பயந்து நரிகள் வருவதில்லை.

திங்கள் முதல் வௌ்ளி வரை நாய்கள் காவல் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இருப்பினும், சனி, ஞாயிறு தினங்களில் கூட நாய்களின் வாசம் குறித்த பகுதிகளில் இருப்பதால் நரிகள் எட்டியும் பார்ப்பதில்லையாம்.

இன்று பென்குயின்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது.

பென்குயின்களைக் காப்பாற்றும் நாய்களின் கதை Oddball என்ற பெயரில் ஹொலிவுட் திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்