இரத்தினக்கல் அகழ்விற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை – ஜனாதிபதி

இரத்தினக்கல் அகழ்விற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 7:51 pm

நாட்டில் முன்னெடுக்கப்படும் இரத்தினக்கல் அகழ்விற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்