வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 10:29 pm

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டளஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாந்து, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஸ, காமினி லொக்குகே மற்றும் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகஸ்தர் சங்கத்தினர் இன்று பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் செத்சிறிபாயவை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து பட்டதாரிகளும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி இவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.

ஆனால், அதற்கு பொலிஸார் சந்தர்ப்பம் வழங்கவில்லை.

பேச்சுவார்த்தைக்காக பிரதமர் அலுவலகத்திற்கு பட்டதாரிகள் சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்