வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் – மஹிந்த அமரவீர

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் – மஹிந்த அமரவீர

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 6:54 am

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபசெயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் நேற்று (17) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது வரவு செலவுத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியனரால் முன்வைக்கப்பட்ட காரணிகள் குறித்து பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்