“மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” விழிப்புணர்வுத் திட்டம் நிறைவு

“மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” விழிப்புணர்வுத் திட்டம் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 10:03 pm

சமத்துவம் மற்றும் பாதுகாப்பின் ஊடாக பெண்களை வலுப்படுத்தும் வகையில் “மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தின் முதலாவது அத்தியாயம் இன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

நிறைவு விழா நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றன.

மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்குவோம் செயற்றிட்டத்தின் நிறைவு நிகழ்வு வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் அரண் செயற்றிட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஜப்பான் அழகுராணி சச்சியே ஒகாவாவும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

சமத்துவம் மற்றும் பாதுகாப்பின் இலச்சினையாக இளஞ்சிவப்பு நிற பட்டிகள் மஹரகம பகுதியைச் சேர்ந்த பெண்களின் கைகளில் கட்டப்பட்டன.

பெண்களின் எதிர்காலத்திற்காக பெண்கள் சமர்ப்பித்துள்ள யோசனைகளை விசேட நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்து மகஜர் ஒன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியூஸ்பெஸ்ட் தலைமையில் சக்தி, சிரச ஊடக வலையமைப்பு முன்னெடுத்த இந்த விழிப்புணர்வுத் திட்டத்திற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை பொலிஸ் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஒத்துழைப்பை நல்கியிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்