பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறுவருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறுவருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறுவருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 8:19 am

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறுவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடமைகளின் நிமித்தம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் தலங்கம பொலிஸ் தலைமையதிகாரி சிலாபம் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் , பொல்கஹவில பொலிஸ் தலைமை அதிகாரி தலங்கம பொலிஸ் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸ் தலைமை அதிகாரி , பொல்கஹவில பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மாவனெல்லை தலைமை அதிகாரி, பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கும் , பண்டாரகம பொலிஸ் தலைமை அதிகாரி மாவனெல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்