புதிய அரசியலமைப்பிற்கான எனது கடமைகளையும் பொறுப்புகளையும் முன்னெடுப்பேன்

புதிய அரசியலமைப்பிற்கான எனது கடமைகளையும் பொறுப்புகளையும் முன்னெடுப்பேன்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 6:50 pm

நீதிமன்ற சேவைகள் சங்கத்தின் வருடாந்த நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது;

[quote]ஒரு காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் அல்லது உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் நீதிமன்றம் செயற்பட்ட போது நீதியரசர்களின் வீடுகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதேபோன்று, நிறைவேற்று அதிகாரத்திற்குக் கீழ்படியாமையினால் பிரதம நீதியரசர் 48 மணித்தியாலத்திற்குள் குறுகிய விசாரணையின் பின்னர் நீக்கப்பட்ட யுகம் காணப்பட்டது. இது அனைவருக்கும் நினைவில் இருக்கும். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சியை ஏற்படுத்த, கடந்த 11 மாதகாலமாக இந்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜனாதிபதிப் பதவியில் உள்ள அதிகாரத்தை முற்றாக நீக்கி அல்லது அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில், புதிய அரசியலமைப்பிற்கான எனது கடமைகளையும் பொறுப்புகளையும் முன்னெடுப்பேன் என விசேடமாக கூறிக்கொள்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்