டில்லியில் மாணவி குழு பாலியல் வல்லுறவு: குற்றவாளி ஒருவர் விடுதலையாகிறார்

டில்லியில் மாணவி குழு பாலியல் வல்லுறவு: குற்றவாளி ஒருவர் விடுதலையாகிறார்

டில்லியில் மாணவி குழு பாலியல் வல்லுறவு: குற்றவாளி ஒருவர் விடுதலையாகிறார்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 5:39 pm

இந்தியத் தலைநகர் டில்லியில் 2012 ஆம் ஆண்டில் மாணவி ஒருவர் குழு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்படுவதை தடுக்க முடியாது என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தவரே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளார்.

இந்தியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்துவிட்டார்.

ஆனால், அவரது தண்டனையை நீட்டிக்க வேண்டுமென உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரும் அரசியல்வாதிகளும் கோரியுள்ளனர்.

இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் இந்தியா எங்கிலும் பெரும் கண்டன அலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏனைய மூன்று பேர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்