சுவாசிக்கத் தகுதியற்ற நிலையில் காற்று: சீனாவில் அபாய எச்சரிக்கை விடுப்பு

சுவாசிக்கத் தகுதியற்ற நிலையில் காற்று: சீனாவில் அபாய எச்சரிக்கை விடுப்பு

சுவாசிக்கத் தகுதியற்ற நிலையில் காற்று: சீனாவில் அபாய எச்சரிக்கை விடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 3:34 pm

சீனத் தலைநகர் பீஜிங்கில் வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மாசடைந்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்று மாறிவிட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்வுக்கு காற்றில் மாசின் அளவு 200 அலகுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடாக உள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி பீஜிங்கில் 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு படிப்படியாக உயர்ந்து, 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

300 அலகுகளைத் தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்