கிளிநொச்சியில் சிசுவொன்றின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சியில் சிசுவொன்றின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சியில் சிசுவொன்றின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 7:07 am

கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் பிறந்த சிசு ஒன்று, உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் நேற்று (17) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி கடும் இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற சென்றதையடுத்து சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சிசு, உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வீட்டு அலுமாரியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலையணையால் அழுத்தி சிசுவின் சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சிசுவை பிரசவித்த தாய் சட்டரீதியாக பதிவுத்திருமணம் செய்யவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த தாய் பொலிஸாரின் பாதுகாப்பில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்