எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் நாளை ஆரம்பம்

எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் நாளை ஆரம்பம்

எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 7:25 am

சமாதானத்தின் தூதரான இயேசு பாலனின் வருகையை கொண்டாட முழு உலகமும் தயாராகிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இலங்கை மக்கள் இதுவரை கண்டிராத கண்களுக்கு விருந்து படைக்கும் நத்தார் வலயத்தை உங்களுக்கு பரிசளிக்க எம்.ரி.வி/ எம்.பி.சி ஊடக வலயமைப்பு தயாராகிவருகின்றது.

இந்த நத்தார் வலயத்தினை நாளை முதல் பார்வையிடக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

நத்தார் அலங்காரங்கள், கெரோல் கீதங்கள், உள்ளத்தை ஈர்க்கும் நாட்டிய நடனங்கள் ஆகியன இந்த நத்தார் வலயத்தில் உள்ளடங்குகின்றன.

க்ளமன்ட் பெர்னாண்டோவின் இயக்கத்தில் தினேஷ் சுபசிங்கவின் பாடல் வரிகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் நாட்டிய நடன நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

நத்தார் பண்டிகையில் உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுப்பதற்காக நத்தார் வலயத்தில் சிறுவர்களுக்கென தனியான வலயமொன்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் ஸ்தாபிக்கப்படுகின்றது.

நாளை திறக்கப்படும் நத்தார் வலயலத்தினை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்கள் பார்வையிட முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்