இலங்கையின் முதலாவது தொழில்சார் குத்துச்சண்டை கோதாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இலங்கையின் முதலாவது தொழில்சார் குத்துச்சண்டை கோதாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 9:33 pm

இலங்கையின் முதலாவது தொழில்சார் குத்துச்சண்டை கோதாவை ரத்மலானை ஸ்டெய்ன் கலையத் தொகுதியில் நாளை (19) நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் செம்பியன் நெட்வர்க்கின் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கோதாவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இன்று பகல் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

உலக குத்துச்சண்டை சங்கத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் இந்தக் கோதாவில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலக நிரல்படுத்தலில் முன்னிலை வகிக்கும் வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

நம் நாட்டு குத்துச்சண்டைப் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் இந்தக் கோதாவில் 46 கிலோகிராம் அடம் வெய்ட் (Atom Weight) பிரிவில் உலக சாம்பியனான ஜப்பானின் நாவோ இகயாமா ( Nao Ikeyama) பிலிப்பைன்ஸின் ஜூஜியாத் நகோவாவுடன் Jujeath Nagaowa மோதவுள்ளார்.

சாம்பியன் பட்டத்தைத் தவிர சுப்பர் பிளைவ் வெய்ட் (Super fly Weight) பிரிவில் கண்காட்சி கோதாவொன்றும் இடம்பெறவுள்ளது.

வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் இலங்கைக்கே உரித்தான தற்காப்புக் கலைகளுடன் அரங்கேறவுள்ள இந்த மாபெரும் குத்துச்சண்டை கோதா நாளை இரவு 7.30 இலிருந்து சிரச டிவி ஊடாக நேரடியாக ஔிபரப்பப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்