இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள் கோரிக்கை

இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 10:25 pm

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு மன்னார் மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட முள்ளிக்குளம் கிராமம் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதனால் இந்தியாவிலும் உள்நாட்டிலும் அகதி என்ற முத்திரையுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் சொந்த காணிகள் உள்ளதால் மலைக்காட்டுப் பகுதியில் தற்காலிகக் குடியிருப்புக்களில் வாழ்ந்துவரும் மக்களின் அவல நிலை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதனையடுத்து, முள்ளிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

மக்களின் கோரிக்கை தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக இதன்போது அரசாங்க அதிபர் உறுதியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்