இந்தியாவிற்கான கடல்வழி சுரங்கப்பாதைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை – பெருந்தெருக்கள் அமைச்சர்

இந்தியாவிற்கான கடல்வழி சுரங்கப்பாதைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை – பெருந்தெருக்கள் அமைச்சர்

இந்தியாவிற்கான கடல்வழி சுரங்கப்பாதைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை – பெருந்தெருக்கள் அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 7:12 pm

இந்திய பாராளுமன்றத்தின் விசேட அறிவிப்பொன்றை முன் வைத்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் சுரங்கப் பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் முகமாக உத்தேசிக்கப்பட்டுள்ள கடல் வழி சுரங்கப் பாதை திட்டம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பத்திரிக்கை ஒன்றிலேயே இச்செய்தியைக் காண நேர்ந்ததாகவும் தமது அமைச்சில் இது குறித்து எவரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டினுள் வீதிகள், பாலங்களைச் செய்வதே தமது அமைச்சின் பணி என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், கொழும்பு – கண்டி அதிவேக வீதி, இரத்தினபுரி அதிவேக வீதி ஆகியவற்றை நிர்மாணிப்பதே தற்போது தமக்குள்ள பணி எனவும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்