அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரிப்பு; உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரிப்பு; உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரிப்பு; உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2015 | 8:07 am

10 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே அமெரிக்காவின் வட்டி வீதம் பூச்சியத்திற்கு அண்மித்ததாகவே காணப்பட்டது. இப்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் வட்டி வீதமானது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது அமெரிக்காவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 5% உள்ளது.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்த வட்டி வீதம் 0.25 % அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளமையினால் தனிநபர் செலவு வீதம் மற்றும் வியாபார முதலீடுகள் நிலையான வீதத்தில் அதிகரிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயரதிகாரி தெரிவித்தார். வட்டி வீதமானது தொடர்ந்து அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக இதுவரை காலமும் வட்டி வீதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது. அத்துடன் பணவீக்கமும் தற்போது கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. அமெரிக்காவில் தற்போது மாதம் ஒன்றிற்கு 237,000 தொழில் வாய்ப்புக்கள் புதிதாக ஏற்படுத்தப்படுகின்றது.

இந்த மாற்றம் மக்களது சேமிப்பை அதிகரிப்பதுடன் கடன் வாங்கும் தன்மையை குறைக்கும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலிடுவதற்கான பண அளவு குறைவடைவதனால் பங்குச்சந்தை முதலீடுகள் குறைவடையக்கூடிய சாத்தியமும் ஏற்படும்.

மேலும் அமெரிக்க டொலரின் பெறுமதி ஏனைய நாடுகளின் பண பெறுமதியுடன் ஒப்பிடும் போது அதிகரிக்கும் என பொருளாதார விற்பனர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதனால் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் சாத்தியமும் காணப்படுகின்றது.

இந்த அறிவிப்பின் மூலம் உலகலாவிய ரீதியிலுள்ள பங்குச்சந்தை நிலவரங்களில் மாற்றங்கள் உண்டாவதுடன் உலக பொருளாதரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்