வரவு செலவுத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்பிப்பு

வரவு செலவுத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்பிப்பு

வரவு செலவுத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 12:21 pm

வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்கள் தொடர்பில் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் ஊடாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ,அதன் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத 17 அமைச்சுகள் தொடர்பில் இந்த செயற்குழுவினூடாக ஆராயப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விசேட செயற்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதற்கு சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்