வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

வனஜீவராசிகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 12:12 pm

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினர் பொதுமக்களின் முறைபாடுகளை ஏற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

கடந்த காலங்களில் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட காடுகளில் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் போது ஊழல் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் முறைபாடுகளை முன்வைத்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயலாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல தெரிவித்தார்.

இது தொடர்பான தகவல்களை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதவான் நிமல் திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

பொதுமக்களின் முறைப்பாடுகளை வனஜீவராசிகள் அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும், வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்