வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம்

வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 7:20 pm

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது.

வெளிநாடுகளிலிருந்து முதலீடு செய்ய வருவோரின் குறைகளை நிவரத்தி செய்வதற்குரிய காரியாலயம் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நவம்பர் 26 ஆம் திகதியை பேரிடர் தினமாக வடமாகாண சபை பிரகடனப்படுத்த வேண்டும் என, வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இன்றைய அமர்வின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இன்றைய அமர்வில் வடமாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள வீடமைப்பு, நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்