லிந்துலையில் பஸ் வீழ்ந்து குடை சாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 46 பேர் காயம்

லிந்துலையில் பஸ் வீழ்ந்து குடை சாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 46 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 2:15 pm

லிந்துலை – நுவரெலிய வீதியின் விநாயகர் கோயிலருகில் தனியார் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் , விபத்தில் காயமடைந்த பயணிகள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

தேயிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்