யாழ் மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணையின் ஆறாம் நாள் இன்று

யாழ் மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணையின் ஆறாம் நாள் இன்று

யாழ் மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணையின் ஆறாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 7:51 am

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று ஆறாவது நாளாக சாட்சி விசாரணைகளை பதிவு செய்யவுள்ளது.

வலிகாமம் பிரதேச செயலகத்தில் இன்றைய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஐந்தாவது நாளாக சங்கானையில் நேற்று இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் 172 பேரின் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் 52 புதிய முறைப்பாடுகளும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த 11 ஆம் திகதி முதல் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்