நுவன் குலசேகரவின் கோமிலா விக்டோரியஸ் BPL கிண்ணத்தை சுவீகரித்தது

நுவன் குலசேகரவின் கோமிலா விக்டோரியஸ் BPL கிண்ணத்தை சுவீகரித்தது

நுவன் குலசேகரவின் கோமிலா விக்டோரியஸ் BPL கிண்ணத்தை சுவீகரித்தது

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 3:17 pm

நுவன் குலசேகர பிரதிநிதித்துவப்படுத்தும் கோமிலா விக்டோரியஸ் அணி, பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) இருபதுக்கு இருபது கிண்ணத்தை சுவீகரித்தது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி ஷேயா பங்க்ளா மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கோமிலா விக்டோரியஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, துடுப்பெடுத்தாடிய பெரியால் புல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமட் மொஹமதுல்லா 48 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோமிலா விக்டோரியஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கைக் கடந்தது.

இம்ருல் கைய்ஸ் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

போட்டி நாயகனாக ஆலோன் கபாலியும் தொடர் நாயகனாக அசார் சையதும் தெரிவு செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்