ஜனாதிபதி தலைமையில் சிறுநீரக நோய் தடுப்பு தேசிய திட்டம்

ஜனாதிபதி தலைமையில் சிறுநீரக நோய் தடுப்பு தேசிய திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 9:34 pm

சிறுநீரக நோய் தடுப்பு தேசிய திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி படையணி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பிலான பாடல் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.

சிறுநீரக நோய் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்காக 1951 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதேவேளை, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பிலான படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

அதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் இன்று பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்