கெவின் பீட்டர்சனுக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம்

கெவின் பீட்டர்சனுக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம்

கெவின் பீட்டர்சனுக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 11:53 am

இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராக இருந்தவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து சர்வதேச அணியில் அவருக்கு சமீப காலமாக இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல். போன்ற டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தென்ஆபிரிக்காவில் நடைபெற்ற ராம் ஸ்லாம் டி20 லீக் தொடர் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் விளையாடுவதற்காக கடந்த சனிக்கிழமை தென்ஆப்பிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குவாண்டஸ் விமானத்தில் சென்றார்.

முன்னதாக விமான நிலையத்திற்கு, கெவின் பீட்டர்சன் சாதாரணமான செருப்பு அணிந்து சென்றிருந்தார். இதனால் விமான ஊழியர்கள் அவரை விமான நிலைய ஓய்வறைக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பீட்டர்சன், குவாண்டஸ் விமான நிறுவனத்தை தலையாட்டி பொம்மை என்று ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்