ஓடி ஔியப் போவதில்லை, சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சிம்பு

ஓடி ஔியப் போவதில்லை, சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சிம்பு

ஓடி ஔியப் போவதில்லை, சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சிம்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 5:12 pm

சிம்பு பாடிய ”பீப் சாங்” தான் தற்போது தமிழகத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இப்பாடலுக்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகின்றது.

அனிருத் தான் பாடவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இருப்பினும் சிம்பு, அனிருத் இருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் நடிகர் சிம்பு வீட்டின் அருகே மகளிர் இயக்கத்தினர் இரண்டாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பாடல் பெண்களை அவதூறு செய்யும் வகையில் உள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

சிம்பு, அனிருத் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தான் ஓடி ஔியப் போவதில்லை எனவும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயார் எனவும் சிம்பு அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்