ஏனைய நாடுகளுக்கு இலங்கை ஓர் உதாரணம்: தோமஸ் ஷெனன்

ஏனைய நாடுகளுக்கு இலங்கை ஓர் உதாரணம்: தோமஸ் ஷெனன்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 9:42 pm

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு இலங்கை ஓர் உதாரணம் என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போது தோமஸ் ஷெனன் தனது கொள்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்

அவர் தெரிவித்ததாவது;

[quote]ஜனநாயகத்திற்காக உயிர்த்தியாகம் செய்யக்கூடிய மக்கள் வாழும் நாடே இலங்கையாகும். வாக்குரிமை மூலம் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இயலுமை இலங்கை மக்களுக்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் ஏனைய நாடுகளுக்கு இலங்கையை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். குறிப்பாக அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தின் போது மீட்புப் பணிகளில் இலங்கை இராணுவம் தலைமைத்துவம் வகித்தமையைக் குறிப்பிட முடியும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்