வித்தியா குறித்து தகவல் திரட்டிய 10 ஆவது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்

வித்தியா குறித்து தகவல் திரட்டிய 10 ஆவது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்

வித்தியா குறித்து தகவல் திரட்டிய 10 ஆவது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 5:24 pm

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆவது சந்தேகநபர் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபருடன் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாணவி வித்தியாவின் வீட்டுக்குச் சென்று தகவல் திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே 10 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய மேலதிக விசாரணைகளுக்காக 5 ஆம் 6 ஆம் மற்றும் 10 ஆம் சந்கேநபர்களை மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

எஞ்சிய 7 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வழியில் காணாமற்போயிருந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மறுநாள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்