யாழில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

யாழில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

யாழில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 11:18 am

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

விற்பனை நிலையத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகியுள்ள அதேவேளை தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்ஒழுக்கினால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்