மெக்சிகோவின் ஆபத்தான கோலிமா எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு

மெக்சிகோவின் ஆபத்தான கோலிமா எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு

மெக்சிகோவின் ஆபத்தான கோலிமா எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 4:39 pm

மெக்சிகோவிலுள்ள கோலிமா எரிமலையின் சீற்றம் மிகவும் கடுமையாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த எரிமலை சீற்றத்துக்குள்ளான நிலையில், தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

எரிமலையிலிருந்து வெளியேறிவரும் நெருப்புக்குழம்புகளும் புகை மண்டலமும் 1.5 மைல்கள் உயரத்திற்கு விண்ணில் பரவியுள்ளது.

இதனால் எரிமலையை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் உள்ள 3,000 எரிமலைகளில் கோலிமா நகரத்திலுள்ள நெருப்பு எரிமலை மிகவும் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்