மலரவனுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட கணவர் எங்கே: விஜிதரனின் மனைவி கேள்வி

மலரவனுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட கணவர் எங்கே: விஜிதரனின் மனைவி கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 10:07 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான மலரவனுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர் எங்கேயென விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிதரனின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார்.

சங்கானை பிரதேச செயலகத்தில் இன்று கூடிய காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று ஐந்தாவது நாளாகவும் யாழ். மாவட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.

சங்கானை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொள்ளுமாறு சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 303 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்