ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 12:59 pm

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (15) பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மீதான 5 வழக்குகளில் தொடர்பிலேயே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் வழக்கு ஒன்றிற்கு 10,000 ரூபா பிரகாரம் 50,000 ரொக்கப் பிணையிலும் , 10 இலட்சம் ரூபா பிரகாரம் 50 இலட்சம் சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார் .

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 5 வழக்குகளில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டதுடன் அவற்றில் காணப்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக அவருக்கு பிணை வழங்குவதற்கான தேவை காணப்படவில்லை.

எனினும் குறித்த 5 குற்றச்சாட்டுக்களும் திருத்தப்பட்டு முன்வைக்கப்பட்டதால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்