கொட்டகெத்தன கொலைகள்: சந்தேகநபரின் மரபணு பொருந்துகிறது

கொட்டகெத்தன கொலைகள்: சந்தேகநபரின் மரபணு பொருந்துகிறது

கொட்டகெத்தன கொலைகள்: சந்தேகநபரின் மரபணு பொருந்துகிறது

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 10:18 pm

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி கொட்டகெத்தன, ஓபாத்த தோட்டத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரின் மரபணு, இதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற நான்கு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவரின் மரபணுக்களுடன் பொருந்துவதாக இன்று தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் மரபணுப் பரிசோதனை அறிக்கை பெல்மதுளை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்தே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொட்டகெத்தனவில் இடம்பெற்ற பெண்களின் கொலைச் சம்பவங்களுடன் சந்தேகநபருடைய மரபணு பொருந்துகின்றதா என ஆராயுமாறு பெல்மதுளை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

சந்தேகநபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதவான் தினேஷ் லக்மால் இன்று உத்தரவிட்டார்.

கொட்டகெத்தன பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதானவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்