காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 8:32 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றும் யாழ். மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

யாழ். சங்கானை பிரதேச செயலகத்தில் இன்று (15) ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக 271 பேருக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 159 பேர் பிரசன்னமாகியிருந்ததாக ஆணைக்குழுவின் உதவி அதிகாரி
தெரிவித்தார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் 45 பேரிடமிருந்து புதிதாக முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்