உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 10:20 pm

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கைதியின் உடல் நலம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமாகிய துஷார உபுல் தெனிய குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் கடந்த 9 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

வழக்கு விசாரணையின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால், கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தும் தாம் சிறையில் வாடுவதாகவும், தனக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் குறித்த கைதி தெரிவித்திருந்தார்

இவருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்த கைதியே சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதியின் உடல் நிலை தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கைதியின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்