இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பால் வங்கி நடவடிக்கைகள் பாதிப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பால் வங்கி நடவடிக்கைகள் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 9:33 pm

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்த நிலையில், இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வங்கி சேவைகளில் இருந்து விலகிய இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் நண்பகல் கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வங்கித் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு பாதகமான யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வங்கி ஊழியர்கள் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பினால் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

வங்கி சேவைகள் முறையாக இடம்பெறாததால் தாம் சிரமத்தை எதிர்நோக்கியதாக மக்கள் கூறினர்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வங்கி ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்