இந்தியாவிலிருந்து 23 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

இந்தியாவிலிருந்து 23 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

இந்தியாவிலிருந்து 23 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 6:59 am

தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளில் 23 பேர் இன்று (15) தாயகம் திரும்பவுள்ளனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.

23 அகதிகளும் இன்று காலை நாட்டை வந்தடைவார்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானஜோதி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இலங்கையை வந்தடைவதற்காக இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடப்பட்டார்.

இதேவேளை மேலதிகமாக 20 கிலோ பொருட்களை கொண்டுவருவதற்கான
அனுமதியும் அகதிகளுக்கு அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமும் 42 அகதிகள் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்ததுடன் இந்த ஆண்டில் 429 தமிழ் அகதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை நாட்டிற்கு 5,600 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாகவும மேலும் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடையும் அகதிகளுக்கும் அரசினூடாக அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்