அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் இன்று கிழக்கிற்கு விஜயம்

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் இன்று கிழக்கிற்கு விஜயம்

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் இன்று கிழக்கிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 7:14 am

நாட்டிற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று கிழக்கு மாகாணத்திற்கு செல்லவுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டை வந்தடைந்த செனன் நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடினார்.

கடற்படை உதவிகள் ,முதலீடுகள் மற்றும் இரு நாட்டிற்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் ​போது கலந்துரையடப்பட்டது

அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் உள்ளிட்ட குழுவினர் நாளை (16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுளளனர்.

இந்த விஜயத்தின் போது அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்